மதுவால் வந்த வினை.. ஊராட்சி மன்ற தலைவி விபரீத முடிவு..!
குடும்பத் தகராறால் ராணிப்பேட்டை அருகே ஊராட்சி மன்ற தலைவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஊராட்சி மன்ற தலைவரான மாதவி என்பவர் தனது கணவன் அடிக்கடி குடித்து விட்டு தகராறு செய்வதால் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் மாதவி விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படும் நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .





