மூடநம்பிக்கையால் பச்சிளம் குழந்தை பலியான விவகாரம்.. நேரில் சென்று விசாரணை செய்த நீதிபதி..!
மூடநம்பிக்கையால் பச்சிளம் குழந்தை பலியான விவகாரம் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்தியதில் கிராமத்திற்குள் பெண்ணை அனுமதிக்க உத்தரவிட்டார். கர்நாடகா மாநிலம் மூடநம்பிக்கையால் பச்சிளம் குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பச்சிளம் குழந்தை இறந்த பின்பும் அவர் இரண்டு நாட்களாக அதே குடிசையிலையே தங்க வைக்கப்பட்டுள்ளார். கிராமத்திற்குள் சேர்த்துக் கொள்ளும்படி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
குழந்தை பலியான பின்பும் வசந்தா குடிசையில தங்கி இருப்பது பற்றி நீதிபதிக்கு தெரிய வந்தது. இதையடுத்து அந்த கிராமத்திற்கு நேரில் சென்றார். அப்போது அதிகாரிகளும் அங்கு வந்திருந்தனர்.
உடனே அவர்களை மூடநம்பிக்கை காரணமாக குழந்தை பலி கொடுத்துவிட்டார்கள் என்றும் தற்பொழுது அந்த பெண்ணும் மிகுந்த சோகத்துடன் காணப்படுவார் என்றும் அவரை வீட்டில் அழைத்துச் செல்லாமல் குடிசையில் தங்க வைப்பது சரியா என அதிகாரிகள் கண்டித்து கொண்டுள்ளனர்.
அதையடுத்து வசந்தாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவும் அங்கிருந்து அரசு மருத்துவமனை நடவடிக்கை, சிகிச்சை எடுப்பதற்கான ஏற்பாடுகளையும் நீதிபதி மேற்கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





