முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
முத்தலாக் தடை சட்டம் அரசியலமைப்பின் அடிப்படையில் செல்லுமா என தீர்மானிக்க கோரி 3 அமைப்புகள் உள்ளிட்ட மூன்று தரப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களில் ஏற்கனவே குற்றமாகவே கருதப்படாத நிலையில், தற்போது புதிய சட்டத்தின்படி கலவரம் செய்தல், ஆள்கடத்தல், அலட்சியத்தால் மரணம், இருதார மணம், லஞ்சம் உணவு, கலப்படம் உள்ளிட்ட குற்றங்களை விட மோசமான குற்றமாக கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட் கடத்தல் குற்றவாளிகள் ஜாமீன் வழங்கப்படுவதோடு கலவரத்தில் ஈடுபடுவதற்கு இரண்டு ஆண்டுகளும் லஞ்சம் வாங்கியவர்கள் ஓராண்டு சிறை, தண்டனை விதிக்கப்படும் நிலையில்,முத்தலாக் தடை சட்டத்தில் ஜாமீன் இல்லா மூன்றாண்டு சிறை என்பது பாரபட்சமான மற்றும் அதிகப்படியான தண்டனை என்று கூறப்பட்டுள்ளது.
கணவனை சிறைக்கு அனுப்பிவிட்டு எவ்வாறு தொடர்புடைய பெண்ணுக்கு நன்மை அளிக்க முடியும் என்றும். கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மனுக்கள் நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது வழக்கறிஞர் உடனடியாக மூன்று முறை தலாக் கூறுவதற்கு அரசியலமைப்பு சட்டப்படி மதிப்பில்லை என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு உத்தரவிடப்பட்டுள்ளதாகவூம், எனவே முத்தலாக் கூறினாலும் தொடர்புடையவர் சட்டப்படி தொடர்புடைய பெண்ணின் கணவராக கருதப்படுவார்கள் என்றும் வாதிட்டார்.
இந்நிலையில் முத்தலாக்கை, குற்றமாகும் சட்டம் தேவையில்லாத ஒன்று என்றும் அவர் கூறினார். இதையடுத்து இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




