டாஸ்மாக் பார் ஒப்பந்தம் 2 மாதம் நீட்டிப்பு..!
தமிழ்நாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் பார்களில் உணவு விற்பனை செய்ய மற்றும் காலியான மதுபாட்டில்களை சேகரிக்க வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் காலியான அட்டைப் பெட்டிகள் மற்றும் கழிவுகளைச் சேகரிக்கும் ஒப்பந்தமும் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




