--- --:--:-- --

ரவுடியை கத்தியை வைத்து குத்தி கொன்ற கும்பல்..!

5

சென்னை வில்லிவாக்கத்தில் காவல் நிலையத்திற்கு பின்புறம் வைத்து ரவுடியை கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். காந்திநகர் பகுதியை சேர்ந்தவரான அப்பு ஆட்டோக்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.

 

இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தனது ஆட்டோவை வில்லிவாக்கத்தை சேர்ந்த மெக்கானிக் விஜய் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். விஜய் சரிவர வாடகையை கட்டவில்லை என கூறப்படுகிறது.

 

வாடகையை வசூலிப்பதற்காக விஜய் வீட்டிற்கு கத்தியுடன் சென்று அவரை மிரட்டியதாக சொல்லப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அப்புவிடம் இருந்த கத்தியை பறித்து அவரை குத்தியதோடு கல்லை தூக்கி முகத்தில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon