--- --:--:-- --

திருந்தி வாழ்ந்து வந்த பெண்ணை கைது செய்த போலீசார்..!

6

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மது விற்பனை தொடர்பாக பெண் ஒருவரை கைது செய்ய முயன்ற போலீசாரை சூழ்ந்து கொண்டு பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் போலீசார் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

 

ஜெயலலிதா என்ற பெண் சாராய விற்பனை செய்து வந்தார் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவரின் ஒத்துழைப்புக்கு கட்டுப்பட்டு இனி மது விற்க மாட்டேன் என ஊர் மக்கள் முன்னிலையிலும் காவல் நிலையத்திலும் எழுத்துப்பூர்வ உறுதி கொடுத்து வந்தார் என்று கூறப்படுகிறது.

 

அதன்படியே மது விற்பனை செய்வதில்லை என கூறப்படும் நிலையில் திடீரென ஊருக்குள் நுழைந்த போலீசார் ஜெயலலிதாவை கைது செய்து அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால் கள்ளச்சாராயம் இறப்புக்கு கணக்கு காட்டுதலுக்காக அவரை கைது செய்வதாக கூறி ஊர் மக்கள் போலீசாரை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon