நள்ளிரவில் வந்த சப்தம்.. வெளியே வந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் பைக் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். பொதுதிரி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரு சக்கர வாகனம் திருட்டு போனதாக புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் மூன்று இளைஞர்கள் பைக் திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இன்னொரு வீட்டில் பைக் திருடும்பொழுது சப்தம் கேட்டு உரிமையாளர் வந்ததால் பைக்கை விட்டுவிட்டு தப்பியோடுவதும் அவரை உரிமையாளர் விரட்டிச் செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





