திடீரெனப் பாய்ந்த மின்சாரம்.. மனைவியை காப்பாற்ற சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்..!
நாமக்கல் மாவட்டம் பழைய பாளையத்தில் விவசாய நிலத்தில் உள்ள மின்மோட்டார் இயக்கிய போது மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழந்தனர். பெரிய சோள கண்ணியை சேர்ந்த மனோகரன் மனைவி கலைச் செல்வியுடன் பழைய பாளையத்தில் ஆறு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.
தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை கலைச்செல்வி இயக்க முற்பட்டார். அப்பொழுது மின் மோட்டர் அமைக்கப்பட்டு இருந்த தகர பெட்டியின் மேல் பொருத்தப்பட்டிருந்த வயரில் மின்கசிவு ஏற்பட்டு இரும்பு பைப்பில் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது.
அந்த பைபிள் கை வைத்த கலைச்செல்வி மீது மின்சாரம் தாக்கியதால் அலறி கூச்சலிடவே காப்பாற்ற சென்ற மனோகரும் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி இருவருமே உயிரிழந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





