அரசு பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதி..!
விருதுநகரில் அரசு பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் நடத்துனரோடு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்தது.
அப்பொழுது அருப்புக்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து மழை நீர் ஒழுகியதால் பயணிகளுக்கு அவல நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நடத்துனரோடு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பயணச்சீட்டு எடுக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.





