--- --:--:-- --

2,000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் மாற்றிக் கொள்ளலாம்..!

2

2000 ரூபாய் நோட்டுக்களை இன்று முதல் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம். 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

 

மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தது. இதற்கான படிமத்தையும் வெளியிட்டது. அதன்படி இன்று முதல் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.

 

அதற்குரிய படிவத்தை நிரப்பி கொடுத்து ஒரு நாளில் 20 ஆயிரம் ரூபாய் அளவுக்கு 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள முடியும். செப்டம்பர் 30-ஆம் தேதி வரையாக அவகாசம் இருப்பதால் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் அவசரம் காட்ட வேண்டாம் என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

Right Menu Icon