--- --:--:-- --

திருமங்கலம் பஞ்சாயத்து இணைப்பு 2023 என்ற திட்டத்தின் மூலம் வங்கி ஊழியர்கள் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு..!

6

திருமங்கலம் அருகே பஞ்சாயத்து இணைப்பு 2023 என்ற திட்டத்தின் மூலம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஊழியர்கள் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் கிராமத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஊழியர்கள் பஞ்சாயத்து இணைப்பு – 2023 என்ற திட்டத்தின் மூலம் வங்கியில் செயல்பட்டு வரும் சமூக பாதுகாப்பு திட்டங்கள், முத்ரா கடன், PM ஸ்வாநிதி, ஸ்டாண்ட் அப் இந்தியா கடன், மகளிர் சுய உதவி குழு கடன் மற்றும் விவசாய கடன் திட்டங்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் வங்கிகளில் செயல்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினர் மேலும் வங்கியில் உள்ள திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

 

இந்த நிகழ்வில் மண்டல மேலாளர் திரு. இரா.மோகன பிரபு தலைமையில், கூடக்கோவில் SBI கிளை மேலாளர் சுபாஷினி பாரதி ஏற்பாட்டில், சிறப்பு பார்வையாளராக பகவதி சசிகுமார், மற்றும் கூடக்கோவில், மேல உப்பிலிகுண்டு, கல்லணை, கொக்குளம், உலகானி ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவர்களும் சுற்றியுள்ள கிராமங்களில் செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்களில் இருந்தும் வங்கி ஊழியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon