--- --:--:-- --

மீண்டும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் ரோபோ சங்கர்..!

5

ரோபோ சங்கர் உடல் மெலிந்து பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சி அளித்தார். அவரை பார்த்த பலரும் ரோபோ ஷங்கருக்கு என்ன தான் ஆகிவிட்டது என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப தொடங்கினர்.

 

ரோபோ சங்கர் அளவுக்கு அதிகமாக குடிப்பழக்கம் இருந்ததால் இப்படி ஆகிவிட்டதாக பலரும் கூறியிருந்தனர். தற்பொழுது ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை ரோபோ சங்கர் பகிர்ந்துள்ளார். அதில் தான் மட்டும் முன்னேறினால் வெற்றியல்ல தன்னை சுற்றி இருப்பவர்களை முன்னேற்றினால் தான் வெற்றியாளன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

எல்லோரும் கவனிக்கிறார்கள் என்று நீயும் பின் தொடராதே. உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு என குறிப்பிட்டுள்ளார். எத்தனை கைகள் தள்ளிவிட்டாலும் நம்பிக்கை தன்னை கைவிடாது என்றும் பதிவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon