முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தல் வெற்றியாளர்கள்..!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் முதலமைச்சர். மு க ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற சங்க தலைவர், செயலாளர்கள் உள்ளிட்டோர் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்.
பின்னர் பேசிய அவர் முரளி ராமசாமி 2009 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்ட வயனூர் அருகே 10 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருந்தார் என்றும் அந்த உத்தரவு காலாவதியாகிவிட்ட நிலையில் தற்போது அந்த உத்தரவை புதுப்பித்து கொடுக்க அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





