--- --:--:-- --

மீனவர்களிடையே தொடரும் பிரச்சனை – மீன்பிடிக்க சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தடை உத்தரவு

2

ஒரே கிராமத்தை சேர்ந்த இரு தரப்பு மீனவர்கள் இடையேயான பிரச்சனை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக நடுவூர் மானா குப்பம் கிராமத்தை சேர்ந்த இரு தரப்பு மீனவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டது.

 

பலமுறை அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றும் சமூக தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் ஏரியில் மீன்பிடிக்க ஏதுவாக எல்லையை வகுக்க மீன்வளத் துறைக்கு அவகாசம் தேவைப்படுவதால் பாதுகாப்பு கருதி மீன்பிடிக்க சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தடை விதித்துள்ளார்.

 

தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon