சுருளி அருவியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு..!
சுருளி அருவியில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மேகமலை வனப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சுருவி அருவியில் நீர் வரத்து அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் சுருளி அருவி தடுப்புகளை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியுள்ளது.
இதனையடுத்து சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று குற்றால அருவிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருவி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




