வாங்கிய கடனுக்காக 11 வயது மகளின் வாழ்க்கையை சீரழித்த தாய்..!
பீகாரில் வாங்கிய கடனுக்காக 11 வயது சிறுமியை தாயாரே திருமணம் செய்து வைத்து சம்பவம் அரங்கேறியுள்ளது. பிஹார் மாநிலத்தில் உள்ள லட்சுமிபுர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திர பாண்டி.
அதே கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்திருந்தார். அந்த கடனை அந்த பெண் திரும்ப கொடுக்க முடியவில்லை. இதனால் வாங்கிய கடனுக்கு அந்த பெண்ணின் 11 வயது மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி கெடு விதித்திருக்கிறார். இதற்கு அந்த பெண்ணும் சம்மதித்து திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில் திடீரென்று சிறுமியின் தாயார் போலீசில் தன்னுடைய மகளை தன் வீட்டில் தங்க வைத்து படிக்க வைப்பதாக பாண்டி தெரிவித்தார். ஆனால் அதை செய்யவில்லை என புகார் அளித்துள்ளதாக தாயார் தெரிவித்துள்ளார். மகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





