--- --:--:-- --

பாஜக ஆட்சியில் ஊழல் மட்டுமே நடக்கிறது – ராகுல் காந்தி

7

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் ஊழல் மட்டுமே சேர்த்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரம் பறக்க தொடங்கியுள்ளது.

 

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பங்கேற்றார். அப்பொழுது பேசிய ராகுல் பிரதமர் மோடி தேர்தலுக்காக மட்டுமே கர்நாடகத்திற்கு வருவதாக கூறினார்.

 

கர்நாடக மக்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த நன்மைகள் குறித்து பேசுவதற்கு மாறாக தம்மை பற்றி சுய தம்பட்டம் படிப்பதாக விமர்சனம் செய்தார். கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி ஊழல் மட்டுமே சேர்த்துள்ளதாக கூறிய ராகுல் காந்தி ஊழலுக்கு எதிராக பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon