விபத்தில் மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்..!
சென்னை போரூரில் சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் செய்துள்ளனர். சென்னை போரூரில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த அருணாச்சலேஸ் கடந்த 22 ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் மூளைச் சாவு அடைந்தார். பின்னர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன் வந்தனர். அதன்படி மாணவரின் கல்லீரல் சென்னையை சேர்ந்த 56 வயது நபருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஒரு சிறுநீரகம் 15 வயது பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் ஒரு அரசு மருத்துவமனைக்கும் இதயம் ஒரு தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. கண் விழி படலங்கள் ராமச்சந்திரா மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





