--- --:--:-- --

பிரதமர் மோடி மீது மொபைல் போன் வீச்சு..!

5

பிரதமர் மோடி மைசூரில் பயணம் செய்த வாகனத்தின் மீது செல்போன் வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பை மேலும் பலப்படுத்த ஆலோசனை செய்யப்படுகிறது.

 

வீசப்பட்ட செல்போன் பாஜக தொண்டர்களுடையது எனவும் பிரதமரை பார்த்த மகிழ்ச்சியில் கைகளை வேகமாக அசைத்தபொழுது செல்போன் வீசப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கார் மீது வீசப்பட்ட செல்போனை கைப்பற்றி உளவுத்துறை மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு குறைபாடுகளை களைய விரைவில் ஆலோசனை நடைபெறும் என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon