--- --:--:-- --

இன்று தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை..!

7

மிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கான இறுதி வேலை நாள் 28ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு முன்கூட்டியே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

அதற்கான திட்ட முதல் செயல்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி இன்று முதல் 28ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது.

 

இந்த பேரணிக்காக பெயர் தயாரிக்கப்படும் தேர்தல் வாகனத்தில் பள்ளி கல்விக்கான அரசின் திட்டங்கள் கற்றல், கற்பித்தல், செயல்பாடுகள், மற்ற செயல்பாடுகள் என பல்வேறு அம்சங்கள் இடம் பெறும். இந்த பேரணியில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க உள்ளன.

 

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர் அரசு பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon