அமெரிக்காவில் பரபரப்பு.. சேவல் சண்டையால் ஏற்பட்ட விபரீதம்..!
அமெரிக்காவில் சேவல் சண்டையால் ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவு மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சேவல் சண்டை போட்டி நடைபெற்றது.
அப்பொழுது திடீரென இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் மீது ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். அப்பொழுது 20 வயது இளைஞர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார்.
இதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிசார் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.





