தமிழ் மீது ஹிந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் திணிக்க முடியாது : ஆர்.என். ரவி
தமிழர்கள் மீது ஹிந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் திணிக்க முடியாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். உத்தர பிரதேசம் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுடன் தமிழக ஆளுநர் உரையாற்றினார்.
அப்பொழுது பேசிய ஆளுநர் தமிழை ஆர்வத்துடன் கற்றுக் கொண்டு தமிழகம் வந்துள்ள மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு இருக்கிறது எனவும் தமிழ்நாட்டிற்கு 3500 ஆண்டுகள் பழமையான வரலாறு இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஹிந்தியை விட தமிழ் பழமை வாய்ந்தது என தெரிவித்த ஆளுநர் சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி எனவும் தெரிவித்தார்.
தமிழ் மற்றும் தமிழ் மக்கள் மீது ஹிந்தி உள்ளிட்ட எந்த ஒரு மொழியையும் திணிக்க முடியாது என தெரிவித்த ஆளுநர் பிறமொழி பேசுபவர்கள் தமிழை கற்றுக்கொள்ள நினைப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





