தமிழகத்தின் மேலும் இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகம்..!
தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பம் நிலை இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
17ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் எனவும் மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





