--- --:--:-- --

தாம்பத்தியத்தில் இருந்து விலகி இருந்த கணவனை தாயிடம் சொன்னதால் நிகழ்ந்த கொடூரம்..!

10

ஆந்திராவில் ஆண்மை பரிசோதனை செய்ததால் ஆத்திரமடைந்த புது மாப்பிள்ளை பெற்றோருடன் சேர்ந்து மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்ற பொறியாளருக்கும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ருக்மணிக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவர் தாம்பத்தியத்திலிருந்து விலகியிருந்ததால் ஏமாற்றம் அடைந்த ருக்மணி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

 

இதையடுத்து சரவணன் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஆண்மை பரிசோதனை செய்துள்ளார். இது குறித்து சரவணன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், மருமகள் ருக்மணி மற்றும் அவரது தாய் தந்தையை தங்கள் வீட்டிற்கு வரவழைத்துள்ளனர்.

 

சரவணன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். அவனது பெற்றோர் ருக்மணியின் தாய் தந்தையை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். இதையடுத்து சரவணன், அவரது பெற்றோரை போலீசார் கைது செய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon