தாயின் கருவறையில் இருந்த சிசுவிற்கு இருதய சிகிச்சை..!
வெளி உலகத்தையே பார்க்காத தாயின் கருவறையிலிருந்து சிசுவிற்கு இருதய சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். டெல்லியை மருத்துவமனையில் கருவில் இருந்த குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இது எப்படி சாத்தியம் எனும் கேள்வி அனைவரிடமும் வந்திருக்கும். ஆனால் அதை சாத்தியப்படுத்தி காட்டியுள்ளனர் மருத்துவர்கள். 28 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைக்காக டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த பெண்ணிற்கு ஏற்கனவே மூன்று முறை கரு தாங்காதது தெரியவந்துள்ளது. நான்காவது முறை கர்ப்பம் தரித்த இந்த பெண்ணை பரிசோதனை செய்த பொழுது பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
ஆனால் தாய் தன் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று உறுதியோடு இருந்துள்ளார். அதன் காரணமாக எய்ம்ஸ் மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதனை அவர்கள் பெற்றோர்களும் தெரிவித்துள்ளனர். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தான் இந்த சவால் மிக்க அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அடைப்பும் வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X





