தாய்ப்பால் விக்கி உயிரை விட்ட குழந்தை..!
தாய்ப்பால் குடிக்கும் போது பச்சிளம் குழந்தை தொண்டையில் சிக்கி மரணம் அடைந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தையின் தாயும், மூத்த மகனும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் லீசா. அந்த பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த 28 நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
அந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊற்றிக் கொண்டிருந்த பொழுது தாய்ப்பால் தொண்டையில் சிக்கி மூச்சு திணறி குழந்தை மரணம் அடைந்தது. இந்த சம்பவத்திற்கு பின்பு லீசா மனம் உடைந்து காணப்பட்டார். இன்று காலை லீசா மூத்த மகனுடன் வீட்டில் அருகே உள்ள கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





