மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இ.வி.கே.எஸ் இளங்கோவனின் தற்போதைய நிலை..!
உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் நேற்று மாலை டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளார்.
அதன் பிறகு அவர் உடல்நிலை குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இ.வி.கே.எஸ் இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இ.வி.கே.எஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாட்களுக்கு மருத்துவர்கள் மருத்துவமனையில் இருக்க அறிவுறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





