--- --:--:-- --

அண்ணாமலைக்கு வேற என்ன..? கேஸ் சிலிண்டர் உயர்வுக்கு யார் காரணம்..?

6

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வதற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் தள்ளுபடிக்கான அட்டை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புதிதாக கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தார். அண்ணாமலைக்கு வேறு வேலை இல்லாததால் திமுகவை விமர்சனம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon