--- --:--:-- --

செங்கல் சூளையில் வேலை செய்யும் போது ஐந்து தொழிலாளர்கள் துடி துடித்து பலி..!

8

சத்தீஸ்கரில் செங்கல் சூளையிலிருந்து வெளியேறிய புகையால் ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மகாசமத் மாவட்டம் காம்புஜாலா கிராமத்தில் சட்டவிரோதமாக செங்கல் சூளை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் செங்கல் சூளையிலிருந்து வெளியேறிய கடும் புகையால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஐந்து பேர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon