--- --:--:-- --

நொடி பொழுதில் அழுகிய இளைஞரின் முகம்..இளம்பெண்ணின் கோபத்தால் விபரீத செயல்..!

2

ஈரோடு பவானி அருகே இளம்பெண் ஆசிட் வீசியதில் படுகாயம் அடைந்த இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார்த்திக் என்று இளைஞர் வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.

 

அப்பொழுது அவரது வீட்டின் அருகே பெண் ஒருவருடன் கார்த்திக் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் திடீரென அந்த பெண் அவர் மீது ஆசிட் வீசி விட்டு தப்பி ஓடியதாகவும் சொல்லப்படுகிறது. உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெண் ஏற்கனவே திருமணமானவர் என்றும் அவருக்கு ஆறு வயதில் மகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவருக்கும் அவரது உறவினரான கார்த்திக்கிற்கும் இடையே திருமணத்தை தாண்டிய உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக கார்த்தி கூறியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் ஆசிட்டை வீசியதாக சொல்லப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon