பிளஸ் டூ பொதுத்தேர்வு நாளை தொடக்கம்..!
தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் டூ தேர்வை தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் தனி தேர்வர்கள் 8,51,303 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 3.15 மணி வரை நடைபெற உள்ளது. இதில் முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளை வாசிக்க வழங்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் கண்காணிப்பு ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





