--- --:--:-- --

உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய மையம் இந்தியாவில் அமைகிறது : பிரதமர் மோடி

1

லக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையம் இந்தியாவில் கட்டப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கூட்டத்தில் உடல் நலம் மற்றும் அடுத்து வாராய்ச்சி என்ற தலைப்பில் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாற்றினார்.

 

ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற பார்வையை உலகிற்கும் முன் வைத்துள்ளதாகவும் சுகாதாரத் துறையில் இந்தியா வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

 

இந்தியாவில் மலிவு விலையில் சிகிச்சை அளிப்பது அரசின் முதன்மை நோக்கம் என்றும் இதன் மூலம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 80,000 கோடி சேமிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

கடந்த ஆண்டுகளில் 27க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்பதாக கூறினார். கொரோனா காலத்தில் மருந்துகள் துறை ஒப்பிட முடியாத வளர்ச்சியை பெற்றிருப்பதாக கூறினார். உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையம் இந்தியாவில் கட்டப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon