--- --:--:-- --

மீன் பிடித்துக் கொண்டிருந்த சிறுமி குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு..!

3

திருவள்ளூர் அருகே குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 வயது சிறுமி அதில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் 13 வயது மகள் கீர்த்தனா திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பகுதியில் மீன் பிடிக்க சென்று அதில் சிறுமி அது தவறி விழுந்து உயிரிழந்தார்.

 

இதனையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon