--- --:--:-- --

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர்..!

1

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தாமஸ் சார்பில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தாமஸ் தாய் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரமோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது வழக்கில் 30 சாட்சிகள் சேர்க்கப்பட்டு 19 பேரிடம் விசாரணை முடிந்துள்ளதாக கூறிய அரசு தரப்பு வழக்கறிஞர் முறையான விதிகளை பின்பற்றியே குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

Right Menu Icon