--- --:--:-- --

நீதிமன்ற வளாகத்தில் மனைவியை வெட்டிய கணவர்..!

10

கேரள மாநிலம் பாலக்காட்டில் விவாகரத்து வழக்குக்காக நீதிமன்றத்திற்கு வந்த மனைவியை அவரது கணவர் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சுனிதா என்பவருக்கு ரஞ்சித் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

 

திருமணத்திற்கு பின் குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை விட்டு பிரிந்து சென்று சுனிதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த சுனிதாவே ரஞ்சித் வெட்டியுள்ளார்.

 

இதில் சுனிதாவின் கையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் ரஞ்சித்தை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon