முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை..!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சோழபுரம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவரின் குடும்பத்தினருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சம்பந்தம் குடும்பத்தினருக்கும் இடையே இட தகராறு குறித்து பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. அவ்வப்போது மோதல் நிலவி வந்துள்ளது.
இந்நிலையில் ராஜேந்திரன் குடும்பத்தினர் சென்று கொண்டிருந்த பொழுது சம்பந்தத்தை வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி சம்பந்தத்தின் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவர் என காவல்துறை உறுதி அளித்ததையடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே இறந்தவரின் உடலை வாங்குவோம் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





