ஆளுநரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி..!
தமிழக ஆளுநர் ரவியை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராகவும் உள்ள ஆளுநர் ரவி, ஆரோவில் இரட்டை பதவியை வகிப்பதாக கூறி அவரை தகுதி நீக்கம் செய்ய கோரி தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்த பொழுது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு சட்டப் பாதுகாப்பு உள்ளதாக குறிப்பிட்டனர்.
அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்பதால் நீதிமன்றங்களுக்கு ஆளுநர் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





