மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு..!
மதுரை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
சீனாவில் BF 7 எனப்படும் புதிய கொரோனா வேகமாக பரவி வருவதால் மத்திய மற்றும் மாநில அரசு சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி மதுரை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அங்கு சென்ற சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.





