--- --:--:-- --

தகாத உறவை துண்டித்த மனைவியின் அக்கா.. இரும்பு ராடால் கொன்ற பயங்கரம்..!

10

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கநல்லூர் அருகே தகாத உறவை கைவிட்டதால் ஆக்கிரத்தில் மனைவியுடன் பிறந்த சகோதரியை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கௌதமி என்பவர் தனது கணவர் இறந்த நிலையில் இரு பிள்ளைகளோடு தனியாக வசித்து வந்துள்ளார்.

 

இதனிடையே கௌதமிக்கும் அவரது தங்கையின் கணவரான சஞ்சீவராயனுக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் உறவு குறித்து உறவினர்களுக்கு தெரிய வரவே கௌதமியை கண்டித்துள்ளனர். இதனால் சஞ்சீவுடன் பேசுவதை கௌதமி தவிர்த்து உள்ளார்.

 

இதில் ஆத்திரமடைந்த சஞ்சீவிராயன் கௌதமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் தலையில் கொடூரமாக தாக்கியதில் கௌதமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

புகாரின் பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சஞ்சீவராயனை தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon