ஏடிஎம்மில் ரூ.500 போட்டால் ரூ.2,500 வந்ததால் பரபரப்பு..!
கோவை மாவட்டம் சூலூரில் ஏடிஎம்மில் 500 ரூபாய் எடுத்தவருக்கு ஐந்து மடங்காக 2500 ரூபாய் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சூலூரில் வசித்து வருபவர் முருகபாபு. தலைமை காவலரான இவர் சூலூர் காவல் நிலையம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் 500 ரூபாய் எடுத்துள்ளார்.
ஆனால் ஏடிஎம் இல் இருந்து 500 ரூபாய்க்கு பதிலாக 2500 ரூபாய் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகபாபு தனக்குரிய 500 ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு மீதி தொகையை சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.





