பக்கத்து வீட்டு பாட்டியை கொன்று தனது வீட்டிலேயே புதைத்த நபர்..!
திருவெண்ணைநல்லூர் அருகே மூதாட்டி காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பமாக நகைக்காக அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் இந்திராணி.
கடந்த 9ம் தேதி முதல் மாயமானதாக அவரது மகள்கள் காவல் நிலையத்தில் புகார்கள் அளித்திருந்தனர். இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த சிவசங்கர் என்பவரது வீட்டில் அந்த பகுதி மக்கள் சந்தேகத்தின் பேரில் சோதித்த பொழுது மூதாட்டி குழிதோண்டி புதைக்கப்பட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலின் பெயரில் வந்த காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு விசாரித்த பொழுது சிவசங்கர் 10 சவரன் நகைக்காக மூதாட்டியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து அடித்து கொலை செய்ததும் தெரிய வந்திருக்கிறது. மேலும் அவரது வீட்டிலேயே புதைத்ததும் அம்பலமாகியுள்ளது.





