மருத்துவமனைக்கு வந்த இறந்த உடல்..பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு..!
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தோர்களின் உடலை கேட்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சண்முகவேல் என்பவர் மயங்கிய நிலையில் கொண்டுவரப்பட்டார்.
அவரை பரிபரிசோதித்த மருத்தவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்ததோடு உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.
ஆனால் இறந்தவரின் உறவினர்களோ பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் எனவும் உடலை திரும்ப ஒப்படைக்குமாறும் கூறி மருத்துவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.





