ஏசி போட்டு உறங்கிய போது ஏற்பட்ட மின்கசிவால் ஒருவர் உயிரிழப்பு..!
சென்னை சூளைமேட்டில் ஏசியில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்தார். சூளைமேட்டில் சுரேஷ்குமார் என்ற தொழில் அதிபர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலையில் மின்கசிவால் ஏசியில் தீ விபத்து ஏற்பட்டு அறை முழுவதும் பரவியுள்ளது.
அப்பொழுது அங்கு உறங்கிக் கொண்டிருந்த சுரேஷ்குமார் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சுரேஷ்குமாரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்று இருந்ததால் அவர்கள் உயிர் தப்பினர்.





