--- --:--:-- --

திடீரென காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சைலேந்திரபாபு..!

3

திருவண்ணாமலை கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு குறித்த ஆய்வு மேற்கொண்டு சைலேந்திரபாபு அதன் தொடர்ச்சியாக கண்ணமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்றிருந்தார்.

 

அப்போது காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். காவலர்கள் வருகை குற்ற வழக்குகளின் விவரங்கள் சரியாக எழுதப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் கார்த்திக் என்பவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

 

அருகிலுள்ள காவலர் குடியிருப்புக்கு சென்று அடிப்படை வசதிகள் இருக்கிறதா என கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திரபாபு போதை பொருள் வழக்கு இல்லா காவல்துறையை தேர்ந்தெடுத்து பாராட்டு வழங்க முடிவெடுத்துள்ளதாக கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon