--- --:--:-- --

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த முடிவு..!

2

மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்புகள் வழங்கியும் தடையற்ற சூழலை அமைத்தும் நம் வாழ்வில் அவர்களை ஒருங்கிணைக்க உறுதி கேட்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்புகள் வழங்குவதற்கான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்தும் விதமாக நாள் அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.

 

திறனுக்கேற்ற தொழிற்பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்பை உருவாக்கவும் அவர்கள் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருட்களை சந்தைபடுத்தவும் அவர்கள் பிறரை சாறாமல் வாழ்வதற்கு பயன்படும் நவீன உபகரணங்களை காட்சிப்படுத்தவும் இந்த நாள் அடையாளப்படுத்தப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon