பள்ளி வகுப்புகள் கோவிலில் நடைபெறுவதால் மாணவர்கள் அவதி..!
திருவண்ணாமலை அருகே பள்ளி வகுப்புகள் கோவிலில் செயல்படுவதால் மாணவர்கள் பாடங்களை கவனிக்க முடியாமல் அவதி அடைந்துள்ளனர். ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறைகள் சேதமடைந்துள்ளதாக புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பள்ளி நிர்வாகத்துடன் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. இதற்கிடையே பள்ளி வகுப்புகள் அருகில் உள்ள கோவிலில் தற்காலிகமாக நடைபெற்று வருகின்றன.
அவ்வப்போது கோவிலில் நடைபெறும் பூஜைகளால் பாடத்தை கவனிக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து புதிய கட்டிடத்தில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





