ட்விட்டர் மற்றும் மெட்டாவை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு..!
ட்விட்டர், மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து google நிறுவனமும் ஆட்குறைப்பில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செயல்திறன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டில் சுமார் 10,000 பேரை பணி நீக்கம் செய்ய கூகுள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இழப்பீடு தொகை, பங்குகள் உள்ளிட்டவற்றை கவனிக்க செயல் திறன் அடிப்படையில் பணி நீக்கம் செய்ய கூகுள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு ஐடி நிறுவனங்களில் இருந்து நடப்பாண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றனர்
📱 Share on WhatsApp 𝕏 Share on X





