அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து..!
மகாராஷ்டிரா மாநிலம் பூனாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் சில பகுதிகளுக்கும் தீ மல மளவென பரவியதால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





