தனி அறைகளாக இல்லாமல் அருகருகே கட்டப்பட்ட கழிப்பறை..!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தனி அறைகளாக இல்லாமல் அருகருகே கட்டப்பட்டுள்ள கழிவறையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தேவாலா பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ள இடத்தில் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போது கழிப்பறையை சீரமைத்து கட்டியுள்ளனர்.
ஏற்கனவே உள்ள கழிப்பறை கட்டிடத்திற்கு பூசி விட்டு அதை ஒட்டி சிறிய அளவிலான கழிப்பறையை ஒப்பந்ததாரர் கட்டியுள்ளார், தனி அறைகளாக இல்லாமல் அருகருகே திறந்த வெளியில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.
இது குறித்து நகராட்சி பொறுப்பு ஆணையரிடம் கேட்டபொழுது குழந்தைகளுக்காக கழிப்பறை கட்டப்பட்டுள்ளதாக கூறினார். மூடப்பட்ட அறைகளுக்குள் குழந்தைகள் சென்றால் அச்சப்படுவார்கள் என்பதற்காக இவ்வாறு திறந்தவெளியில் கட்டப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் கழிப்பறை கட்ட 6 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே உள்ள கழிப்பறை கட்டிடத்தை அப்புறப்படுத்தியதற்கு புதிய கழிப்பறை கட்டிடம் கட்ட உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





