ஸ்கூட்டரில் இருந்த பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்..!
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே ஸ்கூட்டரில் இருந்த பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டது. வண்டி பேட்டையை சேர்ந்த மணி தனது ஸ்கூட்டரை எடுத்த பொழுது அதிலிருந்து வித்தியாசமான சத்தம் வந்துகொண்டு இருந்துள்ளது.
அப்போது ஸ்கூட்டரில் பாம்பு இருந்ததை கண்டுபிடித்தனர். மாத்யூ என்பவரது வீட்டிற்குள் புகுந்த சாரை பாம்பை விரட்டிய பொழுது ஆழ்துளை கிணற்றில் தொட்டிக்குள் விழுந்தது. தகவலின்பேரில் பாம்பை பிடித்து தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் விட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





